சேது சமுத்திர திட்டமும்.. புது ரேஷன் கார்டும்..: ஜெயாவின் பலே ஐடியா!
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா நடைபெறும் அதே ஜூலை 2ம் தேதி தமிழக அரசு புதிய குடும்பஅட்டைகளை வினியோகிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதன் மூலம் சேது சமுத்திரத் திட்ட தொடக்கவிழா செய்திகளை கொஞ்சம் அமுக்கிப் போட அதிமுக முயல்வதாகத் தெரிகிறது.
இந்த அட்டைகள் விநியோகிக்கும் பணி ஜூலை மாதம் 2ம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிகிறது. விடுறை நாட்களில்அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலேயே புதிய குடும்ப அட்டைகள்வழங்கப்படும். தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு இந்தப் பணி நடைபெறும்.
மொத்தம் 1.55 கோடி பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வினியோகிக்கப்படவுள்ளன.
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா மதுரையில் நடைபெறும் அதை ஜூலை 2ம் தேதி தான் புது ரேஷன்கார்டுகளும் வினியோகிக்கப்படுகிறது.
சேது சமுத்திர விழாவில் இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர்கருணாநிதி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக மத்திய அமைச்சர்டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முறைப்படிஎன்றால், அமைச்சர் டி.ஆர்.பாலுவே நேரில் சென்று அழைப்பது தான் சரியானதாக இருக்கும் என்றுகூறப்படுகிறது. காரணம், பாலுவின் அமைச்சகம் தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் போகிறது.
மன்மோகன்சிங், சோனியா காந்தியை ஏற்கனவே நேரில் சென்று தொடக்க விழாவுக்கு வருமாறுஅழைத்துள்ளதாக பாலுவே சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கையில், தமிழகத்தில் நடைபெறும் ஒருவரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விழாவுக்கு, தமிழக முதல்வரை நேரில் அழைக்காமல் அழைப்பு அனுப்பப்படும்என்று பாலு கூறியிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் ரகுபதி மூலம் ஜெயலலிதாவுக்கு அழைப்பைக் கொடுக்க பாலுமுடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
ஜெயலலிதாவின் பலே ஐடியா:
இந் நிலையில் தான் தமிழகத்தில் ஒன்றரை கோடி பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது ஜூலை 2ம் தேதிதொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சேது சமுத்திரத் திட்ட விழாவன்று இந்தப் பணியை தொடங்கினால், வெளியூர்களிலிருந்து மதுரைக்குக் குவியும்கூட்டத்தைக் குறைக்க முடியும் என அதிமுக தரப்பு கருதுகிறது.
மேலும், குடும்பத் தலைவர்கள் தான் நேரில் சென்று புதிய குடும்ப அட்டைகளை வாங்க முடியும் என்றும் அரசுஅறிவிக்கும் எனத் தெரிகிறது.
மக்களின் அத்தியாவசியத் தேவையாகிவிட்ட குடும்ப அட்டைகளை பெறுவதற்கான ஆர்வத்தை தூண்டிவிடுவதன் மூலமும், ஜூலை 2ம் தேதியே இந்தப் பணியை தொடங்குவதன் மூலமும் சேது சமுத்திரத் திட்டத்தைவைத்து மீடியாவின் முழு கவனத்தையும் தன் பக்கமாகத் திருப்பும் திமுகவின் திட்டத்தை ஓரளவுக்கேனும்முறியடிக்க முயலும் என அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் புதிய குடும்ப அட்டை வினியோகப் பணியை ஜெயலலிதாவே தொடங்கி வைக்கக் கூடும் என்றும், இதன்மூலம் சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவுக்கு செல்வதை ஜெயலலிதா தவிர்க்கலாம் என்றும்கருதப்படுகிறது.
எதிலெல்லாம் அரசியல்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications