மீனவர்கள் மீது தாக்குதல்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியது தொடர்பாக இலங்கையிலுள்ளஇந்திய தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக தாக்கினார்கள்.

இதில் 4 மீனவர்கள் வெட்டுக் காயம் அடைந்தனர். சின்னய்யா என்ற மீனவருக்கு தலை, கழுத்து, கால் ஆகியஇடங்களில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூன் 22ம் தேதியன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 4 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சின்னய்யா என்ற மீனவரை அரிவாளால் வெட்டி அவரதுபடகிலிருந்த மீன்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சின்னய்யா வெட்டுக்காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலம் காலமாக தமிழக மீனவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக கச்சத்தீவு அருகே மீன் பிடித்துவருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயல்

தமிழக மீனவர்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும். இலங்கையிலுள்ள இந்திய தூதரகம்மூலமாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+