தமிழில் தந்தி அனுப்பும் வசதி ரத்தாகிறது
சென்னை:
தமிழில் தந்தி அனுப்பும் வசதியை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது வரவேற்பு மிக மோசமாக உள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழில் தந்தி அனுப்பும் வசதியை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்புத் துறை(திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் தான் இத்துறைக்கு அமைச்சர்!) முடிவு செய்துள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தமிழில் தந்தி அனுப்பும் வசதி உள்ள தந்தி அலுவலகங்களில் வருடத்திற்கு 5 தந்திகள் தான் தமிழில்அனுப்பப்படுகின்றனவாம். அதுவும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி தான் இத்தனை தந்திகள் தமிழில்அனுப்பப்படுகின்றன.
மற்ற நாட்களில் ஆங்கிலத்தில் அனுப்பப்படும் தந்திகள் தான் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் தந்தி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தமிழ் இயக்கங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் தமிழ் தந்தி வசதியை பயன்படுத்தி வந்தனர்.
சென்னையில் உள்ள தங்களது அமைப்பின் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து உள்ளிட்ட நாட்களின் போதுதமிழில் தந்தி அனுப்புவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் போகப் போக தமிழில் தந்திஅனுப்புவதை அவர்கள் ஏனோ நிறுத்தி விட்டார்கள்.
பொதுமக்களில் முக்கால்வாசிப்பேர் தமிழில் தந்தி அனுப்புவதில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாகஆங்கிலத்திலேயே தந்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டு விட்டதால் தமிழுக்கு மாற அவர்கள் தயாராகஇல்லை.
தமிழகத்தில் தற்போது சென்னை அண்ணா சாலை, மாம்பலம், மயிலாப்பூர், வேலூர், புதுவை, கரூர், சேலம்,புதுக்கோட்டை, கும்பகோணம், திருச்சி, ஈரோடு, சேலம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில்25 தபால் அலுவலகங்களில் தமிழ் மூலம் தந்தி அனுப்பும் வசதி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த தந்தி அலுவலகங்களில் தமிழில் தந்தி அனுப்பும் டெலிபிரிண்டர்கள்செயல்படாமல் மூலையில் போடப்பட்டுள்ளனவாம். தமிழ் தந்திக்கு வந்த இந்த சோதனையால் பேசாமல் தமிழ்தந்தி முறையை மூடி விடலாமா என்று தொலைத் தொடர்புத் துறை யோசித்து வருகிறதாம்.
தமிழை வைத்து இப்போது தமிழக அரசியல்வாதிகளிடையே பெரும் அக்கப் போரே நடந்து வரும் நிலையில்அருமையான ஒரு வசதியை தமிழகம் இழக்கப் போகிறது.
குமரி அனந்தன் எதிர்ப்பு:
இதற்கிடையே, தமிழில் தந்தி அனுப்பும் வசதியை நிறுத்தக் கூடாது என்று குமரி அனந்தன் வேண்டுகோள்விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கடுமையான முயற்சிக்குப் பின்னரேமணியார்டர் படிவத்தில் தமிழும், தமிழில் தந்தி கொடுக்கும் வசதியும் வந்தன.
அந்த வசதி வேண்டுமென்பதில் காட்டிய முனைப்பை, தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்தமிழ் ஆர்வலர்கள் காட்டவில்லை. அது நம்முயை குறை தான்.
இந்த விழிப்புணர்வை ஊடகங்களும் ஏற்படுத்ததவில்லை. ஆனாலும் இந்த வசதியை நிறுத்தாமல் அதிகம் பேர்பயன்படுத்தும் வழிமுறைகளை ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொள்ளலாம்.
தமிழில் மென்பொருளை கொண்டு வந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இதற்கு ஆவண செய்யவேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications