சினிமாவில் மது அருந்தும் காட்சிக்கும் தடை வரும்: அன்புமணி
சென்னை:
திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிக்கும் தடை வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிகூறியுள்ளார்.
திரைப்படங்களில் நடிகர்கள்புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு அன்பு மணிதடையை அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் இந்ததடை அமலுக்கு வருகிறது.
இதற்கு திரையுலகில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிகரெட் தயாரிப்புக்கும்,விற்பனைக்கும் தடை விதிக்கப்படாத நிலையில் சினிமாவில் மட்டும் சிகரெட்பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை விதிப்பது நியாயம் அல்ல என்று திரைத்துறையினர் கூறி வருகிறார்கள்.
இந் நிலையில் கடந்த கடந்த இரு தினங்களுக்கு முன் அன்புமணி கூறுகையில்,திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சிகரெட் தயாரிப்பாளர்கள் கோபமடைந்துள்ளனர்.
இதனால் திரைத் துறையினரை எனக்கு எதிராக தூண்டி விட்டு என்னைப்பதவியிலிருந்து அகற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன், எனது கடமையிலிருந்து பின் வாங்க மாட்டேன்.
திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை வைப்பதற்கு சிகரெட்தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்கிறார்கள். புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில்நடிக்க நடிகர்களுக்கும் அவர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்றார்.
இந் நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சிகளும், குழந்தைஉரிமைகளும் என்ற கருத்தரங்கில் அன்புமணி கலந்து கொண்டார். இதில் அவர்பேசுகையில், இந்தியாவில் 25 கோடிப் பேர் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.
40 சதவீத சுகாதார பிரச்சினை புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.சினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பதைப் பார்த்துத் தான் 52 சதவீதம் இளைஞர்கள்முதன் முதலாக புகை பிடிக்க தொடங்குகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இளைஞர் சமுதாயத்தை பாதுகாக்கவே சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்குதடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல வருங்காலத்தில் மது குடிக்கும் காட்சிகளுக்கும் தடை விதிப்பது குறித்துபரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications