சேது சமுத்திர விழாவில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும்: டி.ஆர். பாலு
மதுரை:
சேது சமுத்திரத் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதா உள்நோக்கத்தோடு குறை கூறியுள்ளார். அவரும்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
சேது சமுத்திரத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஜூலை 2ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதற்கானஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா, தன்னால் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்ளமுடியாது என்று இன்று கூறினார். சுற்றுச்சூழல் பிரச்சினை குறித்து கவலைப்படாமல் அவசரகதியில் விழாநடத்துவதால் தன்னால் அதில் கலந்து கொள்ள முடியாது என்று ஜெயலலிதா கூறினார்.
இந் நிலையில் இன்று மதுரை வந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறுகையில், சேது சமுத்திரத் திட்டம்தொடங்குவதற்கு முத்தாய்ப்பாக இந்திய அகழ்வுப் பணிக்குழுவின் தலைவர் குப்தா மற்றும் சேது சமுத்திரத் திட்டதலைவர் ரகுபதி ஆகியோரிடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி இந்திய அகழ்வு நிறுவனம் சேது சமுத்திரத் திட்டத்தில் 12.56 மில்லியன் கி.மீ. தூரம் அகழ்வுப் பணியில்ஈடுபடுத்தப்படும். மொத்தம் 82.5 மில்லியன் கி.மீ. தொலைவிற்கு அகழ்வுப் பணி நடைபெற வேண்டும்.
மீதி பகுதிக்கு உலக அளவில் ஒப்பந்தம் போடப்படும். இப்பணிகள் அடிக்கல் நாட்டிய உடன் தொடங்கப்படும்.
தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங்சிறப்புரையாற்றுகிறார். சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
ஜெயலலிதா பங்கேற்க வேண்டும்:
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கவர்னர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்அழைக்கப்பட்டுள்ளார்கள். இந்த விழாவில் யாரையும் புறக்கணிக்கவில்லை. அனைவருக்கும் அழைப்புஅனுப்பியுள்ளோம்.
கடந்த 22ம் தேதி முதல்வருக்கு பேக்ஸ் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுக கழகஅதிகாரிகள் நேரில் சென்றும் அழைப்பு விடுத்துள்ளனர். முதலமைச்சர் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்என்று விரும்புகின்றோம். அவர் வரமாட்டேன் என்றால் அதற்காக வருத்தப்படுகிறோம்.
சேது சமுத்திரத் திட்டம் குறித்து அவர் கூறிய சில கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை. நான்சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாளாகவும் இருக்க மாட்டேன். உலகமே மகிழ்ச்சி கொள்ளக்கூடிய இந்த விழாதொடர்பாக தமிழக முதல்வர் தனக்குத் தெரியாத ஒரு பிரச்சினையில் தெரிந்தது போல பாவனை செய்வதுஅழகல்ல என்றார் டி.ஆர். பாலு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications