இப்படியும் பிரச்சினை வரலாம் ..
சென்னை:
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், நிலத் தரகர் ஒருவர் தொடர்ந்து ஒரு மணி நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபிநாதன். இவர் ஒரு நிலத்தரகர். கோபிநாதன் அப்பகுதியில்உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் காண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் அழைப்பு வந்துள்ளது.இதையடுத்து சாப்பிட்டவாறே பேசத் தொடங்கினார் கோபிநாதன்.
பேசினார், பேசினார் சுமார் ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டே இருந்தார். இதனால் அவருக்கு அருகில்அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அருண்குமார், ஜெயப்பிரகாஷ், செல்வம், ரங்கநாதன், பாண்டியன்ஆகியோர் ஆத்திரமடைந்தனர்.
பேசுவதாக இருந்தால் வெளியே போய் பேசுங்கள், எங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கோபிநாதனிடம்சொல்லிப் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி பெரிய தகராறாக மாறியது.
ஹோட்டலில் இருந்த உருட்டுக் கட்டைகளால் கோபிநாதனை 5 பேரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர். இதில்கோபிநாதன் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸில் அவர் புகார் கொடுத்தார். போலீஸார் தலைமறைவான 5 பேரையும்பிடித்து கைது செய்தனர். அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறைக் காவலில்வைக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications