திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: இளங்கோவன்
சென்னை:
திமுக கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
சென்னையில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.கூட்டணி கட்சிகள் என்றால் சில கருத்து வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும்.
குழப்பங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை கூட்டணி தலைவரான கருணாநிதி பேசி தீர்த்து வைப்பார். வருகிறசட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். நாங்கள் இதே போல ஒற்றுமையாக இருந்து வெற்றிக்குபாடுபடுவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜி.கே. வாசன் மந்திரியானால் நான் வரவேற்பேன். அவருக்கு வாழ்த்து சொல்லும் முதல் ஆளாக நானாகத் தான்இருப்பேன்.
மத்திய அமைச்சர்கள் தன்னை சந்திப்பதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்தகுற்றச்சாட்டு ஏற்கக் கூடியதல்ல. இவரே பிரதமர், நிதியமைச்சர் போன்றோரை சந்திப்பது கிடையாது. பிறகு எப்படிஇவர் அடுத்தவர்களை குற்றம் சொல்லலாம்?
ஜூலை 15ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்த காமராஜர் பிறந்த நாள் மற்றும் லால்பகதூர் சாஸ்திரிநூற்றாண்டு விழாவை திருச்சியில் நடத்த உள்ளோம். இந்த விழாவில் மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் மேலிடதலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்றார் இளங்கோவன்.


Click it and Unblock the Notifications
