கொலை வழக்கு: 8 நாளில் தீர்ப்பு கூறி உலக சாதனை
சென்னை:
கொலை வழக்கில் 8 நாளில் தீர்ப்பு கூறி சென்னை நீதிமன்றம் உலக சாதனை படைத்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவருக்கும்ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்தது. இருவரும் திருமணமாகாதவர்கள்.
கடந்த 16ம் தேதி இரவு குடித்து விட்டு தனது மீன்பாடி வண்டி மீது தங்கராஜ் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த வரதராஜ், தங்கராஜை சந்தோஷமாக இருக்க அழைத்துள்ளார். என்னால் முடியாது என்று தங்கராஜ்மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வரதராஜ், 17ம் தேதி அதிகாலை கத்தியால் தங்கராஜை சரமாரியாகக் குத்தி கொலைசெய்தார். அதன் பின்னர் தலைமறைவாகி விட்டார்.
அவரை போலீஸார் 6 மணி நேரத்தில் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.
இது தொடர்பாக சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 3 நாட்களில்அதாவது 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி செல்வக்குமார் வழக்கை விசாரித்துவெள்ளிக்கிழமை (24ம் தேதி) தீர்ப்பு வழங்கினார்.
குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதன் மூலம் 8நாட்களிலேயே குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கில் மிகவும் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி முடித்ததற்காக காவல்துறையினருக்குநீதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்தில் மாம்பலம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் 16 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு சாதனைபடைக்கப்பட்டிருந்தது. அதை தங்கராஜ் கொலை வழக்கு முறியடித்து விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications