சிறையிலேயே என் வாழ்க்கை முடிந்துவிடும்: பிரேமானந்தா
சென்னை:
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையைக் கேட்டதும், சிறையிலேயே என்னுடைய வாழ்க்கை முடிந்து விடும் என்று சிறை வாசலில்கண்ணீர் மல்க பிரேமானந்தா கூறினார்.
புதுக்கோட்டை அருகே ஆசிரமம் அமைத்து அதில் சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், ரவிஎன்ற பொறியாளரை கொன்று ஆசிரமத்திற்குள்ளேயே புதைத்த வழக்கிலும் கைது செய்யப்பட்டபிரேமானந்தாவுக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தண்டனை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்தற்போது கடலூர் மத்திய சிறையில் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.
இந் நிலையில், பிரேமானந்தா மீது நான்கு அன்னியச் செலாவணி மோசடி வழக்குகள் நடந்து வந்தன. இந்தவழக்குகளில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த இந்தவழக்குகளை விசாரித்த நீதிபதி ஆறுமுகம், ஒரு வழக்கை தள்ளுபடி செய்தார்.
மற்ற 3 வழக்குகளில் பிரேமானந்தாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 30,000 அபராதமும் விதித்துநீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், நீதிமன்றத்திற்குத் தவறான தகவல் கொடுத்ததற்காக மேலும் ரூ. 30,000அபராதத்தை நீதிபதி விதித்தார்.
தீர்ப்பையொட்டி பிரேமானந்தா பலத்த பாதுகாப்புடன் கடலூர் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தார்.
சிறையிலேயே என் வாழ்க்கை முடியும்:
பிரேமானந்தாவுக்கு ஏற்கனவே 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறையில் பிரேமானந்தா இருந்து விட்டதால்அவரது இந்த 3 ஆண்டு தண்டனைக் காலம் கழிக்கப்பட்டு விடும்.
எனவே இன்னும் 18 ஆண்டுகள் அல்லது குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பிரேமானந்தா சிறையில் இருக்கவேண்டும். இந் நிலையில் தனது எதிர்கால வாழ்க்கை குறித்து சிறை வாசலில் குழுமிய செய்தியாளர்களிடம்பிரேமானந்தா கூறுகையில், இனி என்ன ராஜா இருக்கிறது? என் மீது இருந்த அனைத்து வழக்குகளும் முடிந்துவிட்டன. இனி நான் சிறையிலேயே நிம்மதியாக இருப்பேன். இப்போது எனக்கு 60 வயதாகி விட்டது. இன்னும்18 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு 78 வயதாகி விடும்.
ஆனால் அதுவரை நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது, ரத்தக்கொதிப்பு உள்ளது, ஒரு கண் பார்வை சரியில்லை, ஒரு காது கேட்கவில்லை.
எனது உடம்பில் ஏராளமான நோய்கள் உள்ளன. எனவே, நான் எனது இறுதிக் காலத்தை சிறையிலேயே கழித்துவிடுவேன். உங்களையெல்லாம் திரும்பப் பார்ப்பேனோ, மாட்டேனோ, எனக்குத் தெரியவில்லை ராஜா என்றுகண்ணீர் மல்கக் கூறினார் பிரேமானந்தா.
சிறையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, எல்லோரும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.பெரும்பாலான நேரத்தில் தியானத்தில் தான் ஈடுபடுகிறேன். ஆசிரமத்தில் இருந்தாலும் அதைத் தான் செய்வேன்.அதனால் ஆசிரமத்தில் இருந்தால் என்ன, சிறையில் இருந்தால் என்ன?
என்னை எல்லோரும் செக்ஸ் சாமியார் என்று சொல்கிறார்கள். தயவு செய்து அப்படி என்னை அழைக்காதீர்கள்என்று கூறி விடைபெற்றார் பிரேமானந்தா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications