பெட்ரோல் விலை உயர்வை நியாயப்படுத்தவில்லை: கருணாநிதி
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நியாயப்படுத்தவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைஅறிவித்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அன்றை தினமே விடுத்த அறிக்கையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு சற்றும் ஈவு, இரக்கம் இல்லாமல் திரும்பத் திரும்ப மக்கள் மீது சுமையை ஏற்றுவதிலேயே குறியாக இருக்கிறது என்றுகுறிப்பிட்டிருந்தார்.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடியான நிலைக்கு உள்ளான மத்திய அரசு அந்த முடிவைஅறிவிப்பதை தொடர்ந்து ஒத்தி வைத்துக் கொண்டு வந்தது எனக்குத் தெரியும். இறுதியாக அது குறித்து நடைபெற்றஅமைச்சரவைக் கூட்டத்தின் போது கூட
திமுக அமைச்சர்கள் மூலமாக எந்தக் காரணத்தைக் கொண்டும் மண்ணெண்ணை, சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையைஉயர்த்த ஒப்புக்கொள்ளக் கூடாது என்று நான் வலியுறுத்தத் தவறவில்லை.
தவிர்க்க முடியாத நிலையில் மத்திய அரசு இதனை செய்திருக்கிறது என்று தான் எனது அறிக்கையில் தெரிவித்திருந்தேனே தவிர,எந்த இடத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நான் நியாயப்படுத்தவில்லை.
நான் முதலில் வெளியிட்ட அறிக்கையின் நோக்கமெல்லாம் உண்மையிலேயே இந்த விலை உயர்வு காரணமாக மக்களின்சிரமத்தைக் குறைக்க வேண்டுமென்று ஜெயலலிதா நினைத்தால் தமிழக அரசின் சார்பில் பெட்ரோல், டீசல் மீது மாநில அரசால்விதிக்கப்பட்டுள்ள 27 சதவீத வரியை மாநில அரசே முன்வந்து கணிசமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது தானே தவிர,மத்திய அரசின் விலை உயர்வை நியாயப்படுத்துவதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications