ஜெ.வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்: ராமதாஸ்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க நினைக்கும் முதல்வர் ஜெயலலிதாவை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவை கடலோர பகுதியில் நடத்தாமல் மதுரையில் நடத்தவுள்ளது குறித்து ஜெயலலிதாவிமர்சித்துள்ளார்.
இதே ஜெயலலிதா, தொலை தூர மாவட்டங்களுக்கான திட்டங்களை சென்னையிலிருந்தே பலமுறை தொடங்கிவைத்துள்ளதை அவருக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
சேது சமுத்திரத் திட்டத்தினால் சுற்றுச்சூழல் ஆபத்து இருப்பதாகவும், அதனால் தமிழக மக்களுக்கு டி.ஆர்.பாலு துரோகம்செய்வதாக கூறும் ஜெயலலிதா, கடல் நீரைக் குடி நீராக மாற்றும் திட்டத்தில் அக்கறை காட்டாமல் இருந்ததால், மத்திய அரசின்ஆயிரம் கோடி ரூபாயை தமிழகம் இழந்துள்ளது. இது மட்டும் தமிழகத்திற்கு செய்த துரோகம் இல்லையா?
சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக் கட்டை போட ஜெயலலிதா நினைப்பது தமிழகத்திற்கு அவர் செய்யும் மிகப் பெரியதுரோகம்.
இதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications