குற்றவாளிகளுக்குத் தண்டனை: காவல்துறைக்கு ஜெ. பாராட்டு
சென்னை:
குற்றவாளிகளுக்கு குறுகிய காலத்தில் தண்டனை பெற்றுத் தருவதில் தமிழக காவல்துறை சாதனைகளை மிஞ்சிய சாதனைபடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, குற்றங்களைக் கண்டுபிடிக்கும்எண்ணிக்கையை அதிகரித்து, தமிழக காவல்துறை சாதனை படைத்து வருகிறது.
குற்றப்பத்திக்கை தாக்கல் செய்த 44 நாட்களிலேயே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த சாதனை கடந்த 2004ம்ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நிகழ்த்தப்பட்டது.
இதேபோல கடந்த பிப்ரவரி 7ம் தேதி பதிவு செய்த வழக்கில் 29 நாட்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டது.இதை சட்டமன்றத் தொடரிலேயே பாராட்டியுள்ளேன்.
இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஒரு வழக்கில் 17 நாட்களிலும், இன்னொரு வழக்கில் 16 நாட்களிலும்குற்றவாளிகளுக்கு கடந்த மே மாதம் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறை சாதனைபடைத்துள்ளது.
இந்த சாதனைகளையெல்லாம் மிஞ்சும் வகையில், சென்னை மயிலாப்பூரில் தங்கராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டவழக்கில் 8 நாட்களிலேயே எதிரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
துரிதமாக விசாரணை மேற்கொண்டு தண்டனை பெற்றுத் தந்து சாதனையை விஞ்சிய சாதனையைப் படைத்தகாவல்துறையினருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications