மாமல்லபுரம் அருகே அரசு பஸ்-வேன் மோதலில் 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்தும், வேனும் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர்சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

சென்னை தாம்பரத்திலுள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வேன் மூலம் புதுவைக்கு சுற்றுப்பயணம்சென்றிருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அவர்கள் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில், மாமல்லபுரம் அருகே திருவிடந்தை என்ற இடத்தில் வேன் வந்தபோது, எதிர் திசையில்சென்னையிலிருந்து புதுவை நோக்கி வந்த அரசு பேருந்து, வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் வேன் ஓட்டுனர் உள்பட வேனில் இருந்த 8பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில்நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+