ஜெ. வழக்குகளை ஒன்றாக விசாரிக்கலாம்-பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஓட்டல் வழக்கை இணைத்து ஒன்றாகவிசாரிக்கலாம் என்று பெங்களூர் தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மற்றும் லண்டன் ஓட்டல் வழக்கு ஆகியவைபெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்விரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கக் கோரி முதல்வர்ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சனிக்கிழமை முடிந்தது.
இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்குமாறு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், தினகரன் ஆகியோரின்வழக்கறிஞர்கள் வாதாடினர். இவர்களது வாதத்தை எதிர்த்து வாதாடிய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, இரு வழக்குகளையும்தனித் தனியாகவே விசாரிக்க வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதமும் முடிந்து தீர்ப்புக்காக ஜூன் 22க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தையஉத்தரவில் விளக்கம் கோரி, இளவரசி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் பைசல் செய்து உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவு காரணமாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி ஜூன் 22, 23 மற்றும் 25ல் வழக்கறிஞர்களின் வாதம் நடந்தது. 25ம் தேதி இருதரப்பு வாதம் முடிந்ததை அடுத்து வழக்கு தீர்ப்புக்காக இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் படி நீதிபதி பச்சாப்பூரே, இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கலாம் என்று இன்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்புக்கு பிறகு சொத்து குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஓட்டல் வழக்கின் விசாரணை விரைவில் துவங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications