சேது சமுத்திரம்: வழக்கு போடுமா தமிழக அரசு? ஜெ. பதில்
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது குறித்து இப்போதைக்கு சொல்வதற்கில்லை என்று முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் இன்று பிரதமர் தலைமையில் நடக்கிறது. நாளை மாநிலங்களுக்கிடையிலானமன்றக் கூட்டம் நடக்கிறது.
இந்த இரு கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார். விமான நிலையத்தில் தன்னைச்சந்தித்த செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் குறித்து எனது நிலையை ஏற்கனவே தெளிவாகதெரிவித்துள்ளேன்.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான அனுமதியைக் கூடப் பெறாமல் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல்நாட்டுகிறார்கள். இதில் உள்ள ஆபத்து குறித்து எனது அறிக்கையில், மிகத் தெளிவாக கூறியிருக்கிறேன். இதற்கு மேல்இப்பிரச்சினையில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து இப்போது சொல்வதற்கில்லை என்றார் ஜெயலலிதா. பிரதமரைசந்திக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு அதுகுறித்து இப்போது கூற முடியாது என்று தெரிவித்தார் ஜெயலலிதா.
காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இரு கூட்டங்களிலும் பேசப் போவதாகவும் ஜெயலலிதாதெரிவித்தார்.
முன்னதாக டெல்லி வந்த ஜெயலலிதாவை அதிமுக எம்.பிக்கள் டி.டி.வி தினகரன், கோகுல இந்திரா, எஸ்.எஸ்.சந்திரன், ஜோதி,தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications