பொது செயல் திட்டத்தில் உறுதி வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
குறைந்த பட்ச தேசிய பொது செயல் திட்ட முடிவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுதேவையில்லாதது. எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உறுதியாக இருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுகதலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
பெல், என்டிபிசி, ஓஎன்ஜிசி உள்பட அதிக லாபம் தரும் அரசு நிறுவனங்களின் 49 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு ஆதரவளித்து வரும் இடது சாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் இனிமேல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்கலந்து கொள்ளப் போவதில்லை என்று நேற்று இடது சாரிக்கட்சிகள் அறிவித்தன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடிஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கம்யூனிஸ்ட் தலைவர்களை சமரசப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சோனியாவும் தூதர் ஒருவரைஅனுப்பியுள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு புதிய உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சிக்கலை தீர்க்கும் முயற்சியில் திமுக தலைவர்கருணாநிதியும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதம்எழுதியுள்ளார்.
அதில், நாம் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படி குறைந்த பட்ச தேசிய பொது செயல் திட்டத்தில் கண்டிப்பாக உறுதியாக இருக்கவேண்டும். இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தேவையில்லாதது என்றுகுறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications