ஆங்கிலமும் நமக்கு அவசியம் - கூறுகிறார் வைகோ
சென்னை:
தமிழ் மட்டும் படித்தால் போதாது, நமது முன்னேற்றத்திற்கு ஆங்கில அறிவும் தேவை என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய இணைய தள தொடக்க விழா சென்னையில் நடந்தது. கட்சியின் இணையதளத்தை இயக்கி வைத்து பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,
அண்ணா இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, தமிழுக்கு மகுடம் சூட்டிய அந்தத் தலைமகன், தமிழ் வேண்டும்நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி, பயிற்று மொழி, கல்லூரி போன்ற எல்லா இடங்களிலும் தமிழ் வேண்டும். ஆங்கிலமும்நமக்கு வேண்டும். அப்போது தான் உலக அரங்கில் நம்டைய வருங்காலத் தலைமுறையினர் முன்னேறிச் செல்ல முடியும் என்றுசொன்னார்.
கால் சென்டர்களில், அமெரிக்காவில் நம்முடைய மாணவர்கள் அதிக அளவில் வேலைபார்க்கிறார்கள். அவர்களுக்கு நல்லவருமானம் கிடைக்கிறது. அதனால் தான் தமிழ் முதலிடம் பெற வேண்டும் என்று சொல்லுகிற அதே நேரத்தில் ஆங்கிலத்தைப்புறக்கணிக்க வேண்டாம் என்று நாம் வலியுறுத்துகிறோம்.
சீன மொழியை மட்டுமே பேசத் தெரிந்த சீனர்கள் இன்று ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இங்கிலாந்துபல்கலைக்கழகங்கள் சீனாவுக்கு வந்து அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களது இணையதளத்தை தமிழிலேயே அமைத்திருக்கிறோம். இந்திய இணைய மொழிகளிலேயே தமிழ் தான் முதலிடத்தில்இருக்கிறது. தமிழுக்கு நிகராக வேறு மொழி கிடையாது என்றார் வைகோ.
மதிமுகவின் இணைய தள முகவரி: www.mdmk.org.in மற்றுwww.vaiko.in
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications