மனநோயாளி ஓட்டிய லாரி மோதி 2 பேர் பலி
கோவை:
கோவை மாவட்டம் சூலூர் அருகே மன நோயாளி ஒருவர், லாரியை எடுத்து தாறுமாறாக ஓட்டியதில் அவரது அண்ணன்உள்பட 2 பேர் நசுங்கி இறந்தனர்.
சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். லாரி டிரைவரான இவர் மன நோயால்பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சரிவர வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந் நிலையில் தனது தாயாருடன் சண்டை போட்டு அவரை செருப்பு தைக்கும் ஊசியால் குத்தி விட்டு வீட்டை விட்டு வெளியேவந்தார். அப்போது அதே தெருவில் ரகுநாதன் என்பவரது லாரி அவரது வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருந்தது.
லாரியைப் பார்த்ததும் குஷியடைந்த ரங்கநாதன் கையில் வைத்திருந்த ஊசியால், லாரியின் சாவி துவாரத்தில் விட்டுக்குடைந்துள்ளார். எதிர்பாராத விதமாக லாரி ஸ்டார்ட் ஆகி விட்டது. இதையடுத்து லாரியை தாறுமாறாக படு வேகத்தில் ஓட்டத்தொடங்கினார் ரங்கநாதன்.
இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். சூலூர் மெயின் ரோட்டில் லாரியை படு வேகமாக ஓட்டியதில் பலவாகனங்கள் மீது லாரி மோதியது. சூலூர் பாலம் அருகே சைக்கிளில் வந்த நடராஜ் என்ற முதியவர், நாராயணசாமி, அவரதுமனைவி சாவித்ரி, சூலூர் பஸ் நிலையம் அருகே பைக்கில் வந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி வாணிஸ்ரீ, 2 வயது குழந்தைஆகியோர் மீது லாரி மோதி படுகாயப்படுத்தியது.
இதில் நாராயண சாமி என்பவர் பரிதாபமாக உயிழந்தார். தனது சகோதரர் லாரியை தாறுமாறாக ஓட்டிச் செல்வதைக்கேள்விப்பட்ட அவரது அண்ணன் நாகராஜ், நண்பர் முருகேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் லாரியைத் துரத்திச்சென்று லாரிக்கு குறுக்காக நிறுத்தி லாரியை நிறுத்துமாறு ரங்கநாதனிடம் கூறினார்.
ஆனால் தெளிவான மன நிலையில் இல்லாத ரங்கநாதன், தனது அண்ணன் மீதே லாரியை வேகமாக ஓட்டினார். இதில் சிக்கியநாகராஜ், பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த முருகேசன் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்துசாம்பலானது.
இப்படித் தாறுமாறாக ஓட்டிச் சென்ற லாரி, பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகே நின்றிருந்த ஆளில்லாத வேன் மீது பயங்கரமாகமோதி நின்றது. லாரியிலிருந்து இறங்கித் தப்ப முயன்ற ரங்கநாதனை அங்கு கூடியிருந்தோர் மடக்கிப் பிடித்து போலீஸில்ஒப்படைத்தனர்.
போலீஸார் ரங்கநாதனைக் கைது செய்தனர். சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவுக்கு லாரி தாறுமாறாக ஓடி வந்ததில்,சாலை நெடுகிலும் லாரி மோதி சேதமடைந்த வாகனங்கள் சிதறிக் கிடந்தன. சாலை நெடுகிலும் ரத்தக் கறை காணப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications