சதுர்வேதி சாமியாருக்கு குற்றப்பத்திரிகை நகல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செக்ஸ் சாமியார் சதுர்வேதிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
சென்னை தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை கடத்தி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக செக்ஸ் சாமியார் சதுர்வேதிகைது செய்யப்பட்டார். அவருடன் ஆடிட்டர் பசுபதி, உதவியாளர்கள் பாலு, மனோகரன், ஆனந்த குமார் வழக்கறிஞர்தாமோதரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சதுர்வேதி உட்பட குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்வழங்கப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் 74 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். பின் வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications