வக்கீலின் வில்லங்க கேள்விகள்: கதறிய ஜீவஜோதி தாயார்
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டோர் மீதான திருட்டு வழக்கில் சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ராஜகோபாலின் வழக்கறிஞர் கேட்ட கேள்விகளால் ஜீவஜோதியின் தாயார் கதறிஅழுதார். இதனால் ராஜகோபாலின் வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்த ஜீவஜோதியின் வீட்டிற்குள் அடியாட்களுடன் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அடித்துநொறுக்கி விட்டு பல்வேறு பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாக ராஜகோபால் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தவழக்கில் ஜீவஜோதியின் தாயார் நவமணி திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது நவமணியிடம் குறுக்கு விசாரணை செய்த ராஜகோபால் தரப்பு வழக்கறிஞர் பகவான் தாஸ், ஜீவஜோதி கணவர்பிரின்ஸ் சாந்தகுமார் கொலை குறித்து சில கேள்விகளைக் கேட்டார். இதற்கு நவமணி ஆட்சேபம் தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி, வழக்கு தொடர்பான கேள்விகளை மட்டும் கேட்குமாறு பகவான் தாஸுக்கு உத்தரவிட்டார். இதையடுத்துராஜகோபாலுக்கும், உங்களது மகளுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்தது. இதை கண்டும் காணாமல் நீங்கள் அவருக்குஉடந்தையாக இருந்து வந்தீர்கள் என்று நவமணியைப் பார்த்துக் கூறினார் பகவான்தாஸ்.
இதைக் கேட்டதும் நவமணி கதறி அழுதார். என் மீது அபாண்டமாக புகார் கூறுகிறார்களே என்று அவர் கதறியதால் கோர்ட்டில்பரபரப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட அரசு வக்கீல் சங்கர், எதிர்தரப்பு வக்கீல் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன்,
நவமணியின் மனதை நோகடிக்கும் வகையில் கேள்விகள் கேட்பதாகவும், பெண்களின் கற்பு குறித்து கேள்விகள் கேட்பதைஅனுமதிக்கக் கூடாது என்று நீதிபதியிடம் புகார் கூறினார்.
இதையடுத்து பகவான் தாஸை மறுபடியும் எச்சரித்த நீதிபதி மோகன் ராஜ், இதுபோன்ற கேள்விகளை எல்லாம் கேட்கக் கூடாதுஎன்று கடுமையாக கூறினார். பின்னர் விசாரணை தொடர்ந்தது.
அப்போது, நவமணி மீண்டும் நீதிபதியிடம் முறையிட்டார். தன்னைப் பார்த்து பகவான் தாஸின் ஜூனியர் வழக்கறிஞர்,கேலியாக சிரித்து நக்கலடிப்பதாக அவர் கூறவே, நீதிபதி கோபமடைந்தார்.
இது என்ன, வழக்கை நடத்துவதா, வேண்டாமா, இப்படியெல்லாமா நடந்து கொள்வீர்கள் என்று பகவான் தாஸின் ஜூனியர்வழக்கறிஞரைப் பார்த்து கடுமையாக கேட்டார்.
இந்த நிலையில் மாலை ஆகி விடவே வழக்கு விசாரணையை ஜூலை 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றுஜீவஜோதியிடம் குறுக்கு விசாரணை நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications