இயக்குனர் ஆபாசமாக திட்டியதாக நடிகை சீதா புகார்
சென்னை:
"காதல் வளர்த்தேன் பட இயக்குனர் கலா புதியவன் தன்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக அவர் மீது சென்னைகாவல் நிலையத்தில் நடிகை சீதா புகார் கொடுத்துள்ளார்.
இயக்குனர், நடிகர் பார்த்திபனை விட்டுப் பிரிந்து விட்ட சீதா, இப்போது டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் முழு வீச்சீல்நடித்து வருகிறார். சீதாவுக்கும், டிவி நடிகர் சதீஷ் என்பவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டுவந்தது (இதன் காரணமாகத்தான் பார்த்திபனும், சீதாவும் பிரிந்தார்கள் என்று முன்பு கூறப்பட்டது).
தற்போது அது உண்மை என்பது தெரியவந்துள்ளது. கலா புதியவன் இயக்கத்தில் உருவாகும் காதல் வளர்த்தேன் படத்தில் சீதாநடித்து வருகிறார். இப்படத்தில் சதீஷுக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று கலா புதியவனிடம் சீதா கேட்டுள்ளார் போல.
இதுதொடர்பாக கலாபுதியவன் ஏதோ கூற சீதா கோபமடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம்நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சீதா ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், இயக்குனர் கலா புதியவன் என்னைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் மிகவும் அசிங்கமாக, ஆபாசமான வார்த்தைகளால்திட்டினார் என்று கூறியுள்ளார். இதேபோல நடிகர் விஜயகாந்திடமும் சீதா புகார் தெரிவித்துள்ளார்.
கலா புதியவனும் விஜயகாந்தை அணுகியுள்ளார். ஆனால் சீதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டதால் காவல்நிலையத்திலேயே வைத்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று இரு தரப்பினரிடமும் விஜயகாந்த் கூறி விட்டார்.
அதேபோல காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சமரசம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து சீதா, கலாபுதியவன் இருவரையும் வரவழைத்த விருகம்பாக்கம் காவல் நிலையத்தினர் திங்கள்கிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தைநடத்தி சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications