ஆளுனர் நியமனம்: முதல்வர்களுடன் ஆலோசிக்க ஜெ. கோரிக்கை
டெல்லி:
மாநில ஆளுனர்களை நியமிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை)நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், மாநில ஆளுனர்களை நியமிக்கும் போது, முதல்வர்களுடன்கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு இதை கடைப்பிடிப்பதில்லை. தங்களது ஏஜென்டாக மட்டுமே ஆளுனர்களை அது கருதுகிறது. இதுதவறு.
ஆளுனர்களுக்கென்று ஒரு பதவிக்காலம் இருக்க வேண்டும். இடையில் ஆளுனர் மீது சட்டசபையில் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவரை பதவி நீக்கம் செய்யலாம். அதுவும் குடியரசுத் தலைவர் மட்டுமே ஆளுனரைமாற்றும் முடிவை எடுக்க வேண்டும்.
இப்படி இருந்தால் தான் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சுதந்திரமாகவும், மக்களுக்கான தனதுகடமையை சரியாகவும் செய்ய முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் ஆளுனர்கள் ஒத்துழைத்து நடந்துகொள்ள வேண்டும்.
அதேபோல, ஆளுனர் என்பவர் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார். அப்படி இருக்கும் போது மாநிலஅமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் தான், பல்கலைக்கழகங்கள் தொடர்பாக அவர் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதேபோல, அரசியல் சட்டத்தின் 356வது பிரிவும் தேவையில்லை. அதை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசியல் சூதாட்டத்திற்குத் தான் அந்த அரசியல் சட்டப் பிரிவு உபயோகமாக இருக்கிறது. மாநிலங்களுக்கு சுயாட்சிஅதிகாரத்துடன் கூடிய கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை மதிப்பதே இல்லை. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இடைக்காலத் தீர்ப்பைமுழுமையாகக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
கர்நாடக அரசு இடைக்காலத் தீர்ப்பை கடைப்பிடிக்கச் செய்வதில் மத்திய அரசின் பங்கு முக்கியமானது. அதன்பொறுப்பிலிருந்து மத்திய அரசு விலகி விடக் கூடாது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குசமமானது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications