நுழைவுத் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் மாணவர் மனு தாக்கல்
டெல்லி:
நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு செய்தால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி மாணவர் ஒருவர்உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லாது என்று சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் எனமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் அவர் தெரிவிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
முன்னதாக ஜெயலலிதாவை, சென்னையிலிருந்து வந்த சட்டத்துறை அதிகாரிகளும், மூத்த வழக்கறிஞர்களும் சந்தித்துஉயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், மேல் முறையீடு செய்வது தொடர்பாகவும் விவாதித்தனர்.
தற்போது உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறையாகும். ஜூலை 11ம் தேதி தான் விடுமுறை முடிகிறது. இருப்பினும் ஜூலை4ம் தேதி விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். இந்த நாளில் தர்மாதிகாரி தலைமையிலான நீதிமன்றம் விசாரணைகளைமேற்கொள்ளும்.
எனவே விடுமுறை கால நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் வகையில் இன்னும் 2 நாட்களில் மேல் முறையீட்டுமனுவைத் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந் நிலையில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தால் அதைத் தள்ளுபடி செய்யக் கோரி மாணவர் ஒருவர் மூத்த வழக்கறிஞர்மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பால் எண்ணற்ற மாணவர்கள் பலனடைவர். ஆனால் இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கப்பட்டால் மாணவர்கள் பெரும் பாதிப்படைவர். எனவே தமிழக அரசின் அரசாணைக்கும் தடை விதிக்க வேண்டும்.தமிழக அரசு தாக்கல் செய்யும் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவும், தமிழக அரசு தாக்கல் செய்யப் போகும் மனுவும் ஒரே சமயத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத்தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications