ஜெ. வழக்குகள் இணைப்பு: உச்சநீதிமன்றத்தில் அப்பீல்- அரசு வழக்கறிஞர் தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளை ஒன்றாக விசாரிக்கஉத்தரவிட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செயய்யப் போவதாக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா இன்று பெங்களூர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஓட்டல் வழக்கை இணைக்க கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுமீதான விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்தது.

இந் நிலையில் இரு வழக்குகளையும் ஒரே வழக்காக சேர்த்து விசாரிக்கும் படி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கை சேர்த்து ஒரேவழக்காக விசாரிக்க நீதிபதி பச்சாப்பூரே கடந்த 27ம் தேதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது அரசு வழக்கறிஞர்ஆச்சார்யா, ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது தவறு.

இரண்டு வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்கத் தான் சென்னையிலிருந்து இங்கு மாற்றப்பட்டது. இதனால் இந்தஉத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய இருக்கிறோம். இதற்கு 1 மாதம் அவகாசம் வேண்டும் என்றுகுறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நீதிபதி பச்சாப்பூரே, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களான ஜோதி, சரவணகுமார், ஜீவசேனன் ஆகியோரின்கருத்துக்களை கேட்டறிந்தார். இது குறித்து பரிசீலித்து பதில் மனு தாக்கல் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள்பதில் மனு தாக்கல் செய்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+