அப்துல் கலாம் பயணத்தில் மாற்றம்
நாகப்பட்டினம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தமிழக சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு அப்துல் கலாம் நாளை (வியாழக்கிழமை)சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக இன்று இரவு அவர் திருச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். இரவு திருச்சியில் தங்கும்கலாம், வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு நாகை செல்கிறார்.
அங்கு அவருக்கு நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார். அதன் பின்னர் அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, கீச்சாங்குப்பம் ஆகியபகுதிகளை அப்துல் கலாம் பார்வையிடுகிறார்.
தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்டவற்றையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் காரைக்கால் செல்லும் கலாம், அங்குஅமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகத்தை பார்வையிட்டு குழந்தைகளுடன் அளவளாவுகிறார்.
இதைத் தொடர்ந்து இரவு திருச்சி திரும்பி அங்கிருந்து டெல்லி செல்வதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. அதில் சிறிய மாற்றம்செய்யப்பட்டுள்ளது. நாகையில் மேலும் சில இடங்களையும் கலாம் பார்க்க விரும்புவதால் அங்கு வியாழக்கிழமை இரவுகலாம் தங்கி விட்டு வெள்ளிக்கிழமை காலை திருச்சி சென்று பின்னர் டெல்லி திரும்புவதாக திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications