சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை கோரி வழக்கு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா ஜூலை 2ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபுணர் குழு தெரிவித்த கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு, திமுகதலைவர் கருணாநிதியின் நெருக்கடி காரணமாக இந்த விழாவை அவசர கோலத்தில் நடத்துவதால் இந்த விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிப் பெர்னாண்டோ என்பவர்வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், இந்தத் திட்டத்தால் மன்னார் வளைகுடா பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அத்தோடுமீன் பிடி தொழில் பாதிப்பதோடு ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படும்.
இத்திட்டத்தை நிறைவேற்றினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று தமிழக முதல்வரும் கவலை தெரிவித்துள்ளார். மேலும்,இத்திட்டம் தொடர்பாக இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களிடம் மத்திய அரசு சரிவர கருத்து கேட்கவில்லை.
எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளதடையில்லாச் சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
ஏற்கனவே சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதுநினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications