நாளை சேது சமுத்திர விழா: இன்று முதல் சிறப்பு ரயில்கள்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு, சென்னை மற்றும்கோவையிலிருந்து சிறப்பு ரயில்களை விட ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவில் பொது மக்கள் ஏராளமான அளவில் கலந்து கொள்வதற்காக சென்னை மற்றும் கோவையிலிருந்து சிறப்புரயில்களை இயக்க ரயில்வ இணை அமைச்சர் ஆர்.வேலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை எழும்பூலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் கிளம்புகிறது. இந்த ரயில் மதுரைவழியாக சனிக்கிழமை பிற்பகல் நாகர்கோவிலை அடைகிறது.
இதேபோல மதுரை வரை செல்லும் இன்னொரு ரயில் எழும்பூலிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்புகிறது. மதுரையை காலை8.45 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் சனிக்கிழமை இரவு 10மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமைகாலை 7 மணிக்கு சென்னை வந்தடையும்.
இதேபோல, கோவையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இன்று இரவு11.30 மணிக்குப் புறப்பட்டு சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு தூத்துக்குடியை இந்த ரயில் சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் தூத்துக்குடியிலிருந்து சனிக்கிழமை இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்குகோவை சென்று சேரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications