இன்று சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா
மதுரை:
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா மதுரையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி காலையில் மதுரை வந்தார். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர்பிற்பகலில் வருகின்றனர்.
300 மீட்டர் அகலம், 12 மீட்டர்ஆழம் கொண்டதாக சேது கால்வாய் அமையும். இதன் மூலம் கப்பல் போக்குவரத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, சென்னையிலிருந்து ஒரு கப்பல் தூத்துக்குடிக்கு வர வேண்டும் என்றால்இலங்கையைச் சுற்றித் தான் தூத்துக்குடிக்கு வர முடியும்.
இதற்காக 769 கடல் மைல் தொலைவை அது கடக்க வேண்டும். சேது கால்வாய் அமைவதன் மூலம் இந்த தொலைவு 345 கடல்மைல் தொலைவாக குறையும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழா மதுரை பாண்டி கோவில்அருகே உள்ள மஸ்தான்பட்டியில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்க, பிரதமர் மன்மோகன் சிங் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். ஆளுனர் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியகம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதிமாறன், அன்புமணி, மணிசங்கர அய்யர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
திட்டத் தொடக்க விழாவுக்காக சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன.. தொடக்க விழா நடக்கும் அதே சமயம்,கோடியக்கரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் கடலை ஆழப்படுத்தும் பணிகளும் தொடங்குகின்றன. பிரதமர்திட்டத்தைத் தொடங்கி வைத்ததும் கடலில் மண் அள்ளும் வேலை தொடங்கும். இதை நேரடியாக விழா மேடையில் பெரியதிரை மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க விழாவையொட்டி மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிபி அலெக்சாண்டர் மதுரையில்முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார். விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமரும்,சோனியாவும் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் மதுரைக்கு வருகிறார்கள்.
அங்கிருந்து சுற்றுச் சாலை (ரிங் ரோடு) வழியாக அரசு விருந்தினர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சிறிது நேரஓய்வுக்குப் பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு இருவரும் செல்கிறார்கள்.
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவையொட்டி மதுரை நகர் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள்,சோனியா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் கட் அவுட்கள், வரவேற்பு தோரணங்கள் என நகரமே அமர்க்களப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications