பொறியியல் மாணவர்கள் டீ சர்ட் அணிய தடை?
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் டீ சர்ட் அணிய தடை விதிப்பதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் யோசித்து வருகிறது.
கல்லூரி மாணவ, மாணவியருக்கு சீருடை என்று எதுவும் கிடையாது. தங்களுக்கு விருப்பமான உடையை அணிந்து வரலாம்.ஆனால் பெரும்பாலான கல்லூரிகளில் மிகவும் அலங்கோலமான ஆடைகளில் மாணவ, மாணவியர் வருவதாக புகார்கள்கிளம்பியுள்ளன.
இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் உடை விஷயத்தில் சில முக்கிய முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம்விரைவில் எடுக்கவுள்ளது. அதன்படி மாணவர்கள் பேன்ட்-சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும். டீ சர்ட் போன்வற்றைஅணியக் கூடாது.
சட்டையும் காலர் வைத்த சட்டையாக, முழுக்கை அல்லது அரைக்கையுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஸ்லீவ் லெஸ்ஜாக்கெட், ஓபன் ஜாக்கெட் போன்ற பேஷன் சட்டைகளை அணிந்து வரக் கூடாது.
மாணவிகள் எந்த மாதிரியான உடை அணிந்து வர வேண்டும் என்பது குறித்து கல்லூரி நிர்வாகங்களிடம் ஆலோசனை நடத்திமுடிவு செய்ய பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் மாணவிகளும் டீசர்ட் அணிய தடை விதிக்கப்படவுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியரின் டிரஸ் கோட் குறித்து விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புவெளியிடும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் கேமரா செல்போன்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications