இந்தியாவில் புல்லட் ரயில்: அமைச்சர் வேலு தகவல்
வேலூர்:
இந்தியாவில் ரூ.22,000 கோடி செலவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர்வேலு கூறினார்.
இதில், சென்னையில் 5 மேம்பாலமும், அரக்கோணத்தில் ஒரு பாலமும் கட்டப்படும். மேலும், இந்தியாவில் உள்ள 16,000ஆளில்லாத ரயில்வே கேட் பற்றி கணக்கெடுக்கப்பட்டு, அவற்றில் 1,250 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கதீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 950 கி.மீ. தூரம் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படும். இதில், தமிழகத்தில் 325 கி.மீ. தூரம் பாதைஅகல ரயில் பாதையாக மாற்றப்படும். இத்திட்டம் ரூ.625 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.
மேலும் இந்தியாவில் புல்லட் ரயில் விடும் திட்டம் ஆய்வில் உள்ளது. இது சம்பந்தமாக பிரான்ஸ் நாட்டுடன் ஒரு ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் புல்லட் ரயில் விடுவதற்கு உண்டான தொழில் நுட்ப உதவிகள்,தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் அனைத்து விதத்திலும் பிரான்ஸ் அரசு பயிற்சி வழங்க உள்ளது.
இத்திட்டம் நிறைவேற 40 ஆண்டுகள் தேவைப்படும். ரூ.22 ஆயிரம் கோடி நிதியில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இந்தத்திட்டத்திற்காக தனியாக ரயில் பாதை அமைக்க வேண்டும். திட்டம் நிறைவேறினால் பெங்களுரிலிருந்து சென்னைமீனம்பாக்கத்துக்கு 50 நிமிடத்தில் வந்து விடலாம்.
இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் மீட்டர் கேஜ் இருப்புப் பாதையே இல்லை என்ற நிலை உருவாகும்.
தற்போது மைசூரிலிருந்து சென்னைக்கு பெங்களூர் வழியாக சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்துமைசூருக்கு ஒரு சதாப்தி ரயில் புதிதாக விடப்படும். இந்த ரயில் காட்பாடியில் நின்று செல்ல வேண்டும் என முன்னாள் மத்தியஅமைச்சர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். இது பரிசீலனையில் உள்ளது என்றார் வேலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications