கர்நாடகத்தில் மழை: காவிரியில் தண்ணீர் திறப்பு
பெங்களூர்:
கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பான்மையான அணைகள் நிரம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து இன்று காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டும் டெல்டா பாசன விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடமுடியவில்லை.
கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை என்றும், இதனால் அணைகளில் தண்ணீர் இல்லை என்றும் கூறி கைவிரித்துவிட்டனர்.
கர்நாடக முதல்வர் தரம்சிங்கும் இதே பல்லவியைத் தான் பாடினார். கர்நாடகத்தில் மழை பெய்தால் தண்ணீர் திறந்து விடுவோம்என்று அவர் பங்கிற்கு கூறினார்.
இந் நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் இங்குள்ள கபினி, தலைக்காவிரி, கிருஷ்ணராஜ சாகர் உட்பட பல அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.
இதையடுத்து கர்நாடக காவிரி நீர்பிடிப்பு அணைகளில் இருந்து இன்று முதல் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1000 கன அடிதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications