குஜராத்தில் இன்றும் கனமழை: ரயில்கள் ரத்து
அகமதாபாத்:
குஜராத்தில் இன்றும் கனமழை நீடிக்கிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை150க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகளில் ராணுவமும், விமானப் படையும்ஈடுபட்டுள்ளன.
குஜாராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாநிலத்தில் 70 சதவீத பகுதிகளும்வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தூரிலிருந்து காந்தி எக்ஸ்பிரஸ் ரயில் தாகூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது அங்கு வெள்ளத்தில் ரயில் சிக்கிக் கொண்டது.பயணிகளால் ரயிலை விட்டு கீழே இறங்க முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
சுமார் 36 மணிநேரம் இந்த ரயிலில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பயணிகளும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.வெள்ளம் வடிந்த பிறகு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வதோரா, சூரத் ஆகிய நகரங்களில் மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டபகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் நேற்று விமானத்தில்சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். சுமார் 2 லட்சத்திற்கும்மேற்பட்டோர் வீடுகளை இழந்து விட்டனர். இவர்கள் அனைவரும் பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்காக மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தவெள்ளத்தினால் இதுவரை சுமார் 5,000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரயில்கள் ரத்து:
குஜராத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பல வெளிமாநிலங்களில் இருந்து குஜராத்திற்கு செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தினமும் காலை 9 மணிக்குப் புறப்பட்டு செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் நேற்றும், இன்றும் ரத்துசெய்யப்பட்டன. முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு டிக்கட் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications