வேளாண் பல்கலைக்கழக விழா: நாளை கோவை வருகிறார் ஜெ.
கோவை:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நாளைகோவை செல்கிறார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் ஜெயலலிதா, காலை 11 மணியளவில் கோவை வருகிறார். அவருக்குவிமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில்அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு வேளாண்பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.
பல்கலைக்கழக அரங்கில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் விழாவில் நூற்றாண்டு விழா மலரை அவர் வெளியிடுகிறார்.மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு அலங்கார வளைவு மற்றும் நினைவு ஸ்தூபியை அவர்திறந்து வைக்கிறார். இது தவிர பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பல்வேறு கட்டிடங்களையும் அவர் திறந்து வைக்கிறார்.
பின்னர் சிறந்த 15 விவசாயிகளுக்கு வேளாண்மை செம்மல் பட்டமும், சிறந்த 5 பேராசிரியர்களுக்கு விருதுகளையும் அவர்வழங்குகிறார்.
பலத்த பாதுகாப்பு:
இதே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் தான் தர்மபுரியில் வைத்து எரிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகுஜெயலலிதா இங்கு வருவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த விழாவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கவனிப்பதற்காக டிஜிபி அலெக்சாண்டர் இன்று கோவை வருகிறார்.
இதற்கிடையே கோவை வரும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக எச்சரித்துள்ளது.சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக்கோரி ஜெயலலிதா வரும் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம்செய்யப்போவதாக திமுக கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications