சேது சமுத்திரம்: 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சேது சமுத்திர திட்டத்தால் 50,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும்கடல்சார் வர்த்தகம் பெருகி மீனவர்களின் வாழ்க்கை வளம் பெறும் என்று சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் திமுகதலைவர் கருணாநிதி பேசினார்.

நேற்று நடைபெற்ற சேது சமுத்திர திட்ட துவக்க விழாவில் கருணாநிதி பேசுகையில், கடந்த 1967ல் அண்ணா முதல்வரானதும்தூத்துக்குடி துறைமுக திட்டம், எண்ணூர் 2வது திட்டம், சேது சமுத்திர திட்டம் வேண்டும் என வாதாடினோம். சேது சமுத்திரதிட்டம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

பல முறை பேசி திட்டமிட்டு அறிவித்தும் இது நடப்பது அரிது என கைவிட்டு விட்ட நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு மூலம் கூட்டணிகளை மட்டுமல்ல, கடலையும் இணைக்க முடியும் என்பதை எடுத்து காட்டும் வகையில் இன்று இத்திட்டம்துவக்கி வைக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நாங்கள் வாதாடிய போது வட்டியின்றி அட்டியின்றி நிதி ஒதுக்கீடு செய்தசிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த கால்வாய் திட்டம் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர்மட்டுமில்லாமல் நாட்டின் தொழில் வளர்ச்சியும் பெருகும்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது. பிரதமரும், சோனியாவும் வந்து இத்திட்டத்தை துவக்கி வைக்க கூடாது என சிலர்திட்டமிட்டு நீதிமன்றத்திற்கு சென்றனர். தமிழகத்தின் மீது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை இதன் மூலம்தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதியை தராசு தட்டில் வைத்து நீதிபதிகள் தந்தனர்.

பாக் ஜல சந்தி வழியாக கடலில் கப்பல்கள் செல்ல கால்வாய் அமைத்தால் பணமும், பெருமளவு நேரமும் சேமிக்க முடியும்.கப்பல்களில் எரிபொருள் சேமிக்கப்பட்டு வியாபார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். ஐரோப்பாவின் சூயஸ்கால்வாய் திட்டம்போன்றது தான் சேது சமுத்திர திட்டம். சூயஸ்கால்வாய் நிறைவேற்றப்பட்டதால் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி வருவதுதவிர்க்கப்பட்டது.

மீனவர்கள் வளம் பெருகும்:

இத்திட்டத்தால் 50,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கும். நாட்டின்அன்னிய செலாவணி அதிகரிக்கும். தமிழகத்தின் தொழில், வணிகம் பெருகும். கப்பல்களின் பயண நேரம் குறையும். தமிழகம்மற்றும் பக்கத்து மாநிலங்களில் துறைமுகங்களில் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும்.

சிறு சிறு துறைமுகங்கள் இடையிடையில் உருவாக முடியும். கடல் சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் வாழ்க்கை வளம்பெருகும். மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்விழாவில் ஒரு கோரிக்கையையும் வைக்க விரும்புகிறேன். கடந்த மாதம் 12ம் தேதி பிரதமருக்கு நான் ஒரு கடிதம்எழுதினேன். உலக சந்தை போட்டிகளை சமாளிக்கும் வகையில் வாகன கனரக தொழிற்சாலைகள் மற்றும் தேசிய வாகனசோதனை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உட்கட்டமைப்பு திட்டம் என்ற அமைப்பை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில்அமைக்க வேண்டும் என கடிதம் எழுதினேன்.

இதுவரை சாதகமான பதில் வரவில்லை. பிரதமரிடமிருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறேன். ரூ.1,500 கோடிஅந்த அமைப்புக்காக தேவைப்படும். அதை ஒதுக்கி இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது வெறும் காற்றில் பறந்துவிடாத உறுதிமொழியாக இருக்கும் என எண்ணுகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+