சுற்றுச்சூழல் குறித்து அச்சம் தேவையில்லை: சோனியா

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சேது சமுத்திரத் திட்டத்தால், பவளப் பாறைகளுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

நேற்று மதுரையில் நடைபெற்ற சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் சோனியா காந்தி பேசுகையில்,

150 ஆண்டு கால கனவு இன்று நனவாகிறது. இத்தனை ஆண்டு காலமாக சேது சமுத்திரத் திட்டம் பேசப்பட்டு வந்தாலும், அதைநடைமுறைப்படுத்த எதுவும் செய்யப்படவில்லை.

இன்று, திமுக, பாமக, மதிமுக. ஆகிய கட்சிகள் பங்கு வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொழில்நுட்ப சவாலான,பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, இத்திட்டத்தை நனவாக்க உறுதியுடன் காலடி எடுத்து வைத்திருக்கின்றன.

இத்திட்டம், இந்தியக் கடல் எல்லைக்குள் ஒரு தொடர்ச்சியான கடல்வழிப் பாதையை அமைப்பதால் தேசிய அளவிலும்,மண்டல அளவிலும் நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகம், குறிப்பாக, தென் மாவட்டங்கள்இத்திட்டத்தால் பெரும்பயன் அடையும்.

தமிழகத்தின் கடலோரப் பகுதியின் பொருளாதாரமும், கடல் வணிகமும் பெரும் வளர்ச்சி பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்இத்திட்டம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். பவளப் பாறைகளுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்து அச்சம்எழுப்பியுள்ளனர். திட்ட நிறுவனம் திட்டப் பகுதியின் சுற்றுச் சூழல் காத்து, இத்திட்டத்தை நிறைவேற்றும்.

மீனவச் சமுதாயத்தின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் தேவைகள் நம் முயற்சிகளின்மையமாக அமையும். சுனாமிப் பேரழிவு தெற்குக் கடற்கரையை தாக்கியதைப் போன்ற இயற்கை சீற்றத்தை நாடு இதுவரைகண்டதில்லை.

நாங்கள் உங்கள் துயரை பகிர்ந்ததோடு, வெகுவிரைவாக உதவிகள் செய்ய கடினமாக உழைத்தோம். பாதிக்கப்பட்டபகுதிகளின் சீரமைப்பும், புனரமைப்பும் தொடர்ந்து செய்ய வேண்டிய தேவை உள்ளது. இப்பணிகளுக்கான திட்டங்களைநிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தமிழில் கம்ப்யூட்டர் மென்பொருள் அமைத்து கம்ப்யூட்டர் கல்வியறிவும்,நுட்பங்களும் பெற வழிவகுத்துள்ளோம். ஏற்கனவே எங்கள் அரசு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.

கடந்த 1950ம் ஆண்டுகளில் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் தான் மற்ற மாநிலங்களுக்குமுன்னுதாரணமாக உள்ளது என்றார் சோனியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+