நுழைவுத் தேர்வு: தமிழக அரசின் அப்பீல் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி:
நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசுஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
நுழைவுத் தேர்வு முறைக்குப் பதிலாக பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தொழில் படிப்புகளுக்குமாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இந் நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்ததலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிமுல்லா ஆகியோர் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததுசெல்லாது என்று உத்தரவிட்டனர்.
ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டதால் இந்த ஆண்டுக்கு மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வை அனுமதிக்க வேண்டும் என்றும்நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. தமிழக அரசின்சார்பில் வழக்கறிஞர் அய்யம் பெருமாள் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகத்தான் தமிழக அரசு நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தது.
எனவே அவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு மதிக்கப்பட வேண்டும். இதனால் நுழைவுத் தேர்வு செல்லாது என்றுசென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் தர்மாதிகாரி, கபாடியா ஆகியோர்விசாரணை நடத்துகின்றனர். தமிழக அரசு சார்பில் வழக்கஞர் அய்யம் பெருமாள் ஆஜராகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications