கண்டதேவி: கலெக்டரை கைது செய்ய கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கண்டதேவி கோவில் தேரோட்ட விழாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை கலந்து கொள்ள விடாமல் தடுத்த சிவகங்கைமாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிதமிழக ஆளுநிடம், புதிய தமிழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணசாமி மனு கொடுத்தார்.
இந் நிலையில் இன்று காலை ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்த கிருஷ்ணசாமி, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்,காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று ஆளுனரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை அரசு பொது மருத்துவமனை முன்பும் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.












Click it and Unblock the Notifications