நுழைவுத் தேர்வு: தமிழக அரசின் அப்பீல் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசுஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு முறையை தமிழக அரசு கடந்தமாதம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காக நடத்தப்பட்டு வந்தஇம்ப்ரூவ்மெண்ட் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

நுழைவுத் தேர்வு முறைக்குப் பதிலாக பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தொழில் படிப்புகளுக்குமாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

இந் நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்ததலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிமுல்லா ஆகியோர் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததுசெல்லாது என்று உத்தரவிட்டனர்.

ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டதால் இந்த ஆண்டுக்கு மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வை அனுமதிக்க வேண்டும் என்றும்நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. தமிழக அரசின்சார்பில் வழக்கறிஞர் அய்யம் பெருமாள் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகத்தான் தமிழக அரசு நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தது.

எனவே அவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு மதிக்கப்பட வேண்டும். இதனால் நுழைவுத் தேர்வு செல்லாது என்றுசென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தர்மாதிகாரி, கபாடியா ஆகியோர்விசாரணை நடத்தினர். தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் அய்யம் பெருமாள் ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து தமிழக அரசின்மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வருடம் நுழைவுத் தேர்வின் அடிப்டையிலேயே மாணவர்களுக்குஅனுமதியளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+