(மாணவிகள் எரிக்கப்பட்ட) கோவை வேளாண் பல்கலைக்கழக விழா: ஜெ. பங்கேற்பு
கோவை:
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா இன்று நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு சிறந்த பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா இன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறந்த 5 பேராசிரியர்களுக்கு விருதும், 15 விவசாயிகளுக்கு "வேளாண்மை செம்மல்பட்டமும் வழங்கினார்.
பின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்ட ஜெயலலிதா, நூற்றாண்டு அலங்கார வளைவு மற்றும் நினைவு ஸ்தூபியையும் திறந்துவைத்தார்.
தொடர்ந்து மதுரை வேளாண்மை நிர்வாகக் கட்டடம், மேட்டுப்பாளையம் வன ஆராய்ச்சி கல்லூரி மாணவர் விடுதி, ஆழியாறுஉயிரித் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறை,
கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், திருவான்மியூர், ஆகிய பகுதிகளில் விஞ்ஞான் கிசான் கேந்திரா கட்டடங்களையும்ஜெயலலிதா திறந்து வைத்தார்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட ஜெயலலிதா, காலை 11மணியளவில் கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில்அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு வேளாண்பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.
விழாவை முடித்த பிறகு பிற்பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் ஊட்டி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 3நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications