சசிகலாவுடன் ஊட்டியில் 3 நாட்கள் ஜெ. ஓய்வு
ஊட்டி:
முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுப்பதற்காக ஊட்டி சென்றுள்ளார். அவர் அங்கு 3 நாட்கள்தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலைதனது தோழி சசிகலாவுடம் கோவை வந்தார். பல்கலைக்கழக நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் மூலம்புறப்பட்ட ஜெயலலிதா, 1.50 மணியளவில் ஊட்டி தீட்டுக்கல் மைதானத்துக்கு வந்தார்.
இங்கிருந்து கார் மூலம் அவர் ஊட்டி விருந்தினர் மாளிகைக்கு சென்றார். ஜெயலலிதா இந்த வழியாக சென்றதால், தீட்டுக்கல்பகுதியில் இருந்து தமிழக விருந்தினர் மாளிகைக்கு செல்லும் சாலை மற்றும் முக்கிய போக்குவரத்து பகுதியான ஹில்பங்க்சந்திப்பு ஆகிய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணியில் இருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
முதல்வரின் வாகனம் 2 மணியளவில் ஹில்பங்க் பகுதியை கடந்த பிறகு தான் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
கடந்த முறை முதல்வர் ஜெயலலிதா ஊட்டி வந்த போது வழி நெடுகிலும் கட்சி தொண்டவர்களின் வரவேற்பு அமோகமாகஇருந்தது. ஆனால், இந்த முறை அவரை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு கூட போட்டோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. முதல்வர், சொந்த விஷயமாகஊட்டிக்கு வந்திருப்பதால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என உயரதிகாரிகள் கூறினர்.
ஊட்டியில் மூன்று நாட்கள் தங்கும் தமிழக முதல்வர், அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்பங்களாவில் நடக்கும் விசேஷ பூஜையில் கலந்து கொள்ள இருப்பதாகவும், மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்லஇருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications