ஊனமுற்ற பெண்ணிடம் செக்ஸ் வக்கிரம்: அரசு அதிகாரி கைது
திருவள்ளூர்:
ஊனமுற்ற பெண்ணை தனது ஆசைக்கு இணங்குமாறு கூறி அவரை விடுதிக்கு அழைத்துச் சென்ற வேலை வாய்ப்பு அலுவலகஅலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
குழந்தை பிறந்ததற்குப் பிறகு, உமாவுடன் சண்டை போட்டுக் கொண்டு அவரது கணவர் பிரிந்து போய் விட்டார். இதனால்தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார் உமா.
24 வயதாகும் உமா பிளஸ் டூ வரை படித்துள்ளார். மாவட்ட (திருவள்ளூர்) வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவைத்திருந்தார். அங்கு சென்று வேலை வாய்ப்பு அலுவலக அலுவலர் சுந்தர் என்பவரை சந்தித்து வேலை வாய்ப்பு குறித்து உமாகேட்டுள்ளார்.
அப்போது சுந்தர் (வயது 45) தன்னுடன் உல்லாசமாக இருந்தால் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்தஉமா, சுந்தரை மடக்கிப் பிடிக்க முடிவு செய்து, நாளை வருவதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
பின்னர் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த சுசீலா என்பவரை அணுகி சுந்தரின் பேச்சு குறித்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து சுசீலா போலீஸாரின் உதவியை நாடினார். போலீஸார் சுந்தரை மடக்கிப் பிடிப்பதற்காக சில யோசனைகளைஉமாவிடம் கூறி அவரை மீண்டும் சுந்தரின் அலுவலகத்திற்கு அனுப்பினர்.
உமா திரும்பி வந்ததைப் பார்த்ததும் சம்மதித்து விட்டார் என்று நினைத்துக் கொண்ட சுந்தர், அவரை திருவள்ளூருக்குஅழைத்துச் சென்றார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் உமாவுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு உமாவிடம் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். அப்போது தனக்குமயக்கம் வருவதாக உமா கூறவே, விடுதி பையனை அனுப்பி அனுப்பி குளிர்பானம் வாங்கி வரக் கூறியுள்ளார் சுந்தர். பின்னர்உமாவுக்கு மயக்கம் தெளிவதற்காக காத்திருந்தார்.
அந்த சமயத்தில் சுசீலாவும், போலீஸாரும் அங்கு வந்து சுந்தரை கையும் களவுமாகப் பிடித்தனர். போலீஸ் நிலையத்தில் வைத்துநடந்த அனைத்தையும் உமா புகாராகக் கூற, அதன் அடிப்படையில் சுந்தரை போலீஸார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications