அமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை: லஷ்கர்-ஏ-தொய்பா சதி?
டெல்லி:
அயோத்தியில் மிக பலத்த பாதுகாப்பு நிறைந்த, சர்ச்சைக்குரிய ராமர் கோவில்-பாபர் மசூதி வளாகத்துக்குள் தீவிரவாதிகள்அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதையடுத்து மத்திய அமைச்சரவை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மிகஅவசரமாகக் கூடியது.
இக் கூட்டத்தில் அயோத்தி தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் விளக்கினார். நாடு முழுவதும் இதையடுத்துஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும், நிலைமையை கட்டுக்குள் வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்தைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுவும் அவசரமாகக் கூடி விவாதித்தது. இதில்பிரதமர் தவிர, உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர்கள், உளவுப் பிரிவுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உளவுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள முதல் கட்டத் தகவலின்படி இத் தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகள் தான் நடத்தியதாகத் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிகமான ராமர்கோவிலை தகர்க்கும் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்,
தாற்காலிக கோவிலுக்கு வெளியில் தான் இந்த மோதல் நடந்தது. இதனால் கோவிலுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
அயோத்தி தாக்குதல் குறித்த அறிந்த சில நிமிடங்களிலேயே மத்திய கமாண்டோ படையினர் டெல்லி விமான நிலையத்தில் தயார்நிலைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டனர். அவர்கள் அயோத்திக்கு விரையத் தயாராகினர். ஆனால், அதற்குள் உபிபோலீசாரும், அயோத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்தியப் படையினருமே நிலையை சமாளித்துவிட்டனர்.
இதனால், கமாண்டோக்கள் அனுப்பப்படவில்லை. ஆனாலும் அவர்கள் இப்போதும் தயார் நிலையில் தான் உள்ளனர்.தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் அவர்கள் அயோத்திக்கு விரைவார்கள்.
நாடு முழுவதும் அசாதாரணமான நிலையை உருவாக்கும் நோக்கத்தில் தான் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார்பாட்டீல்.
பிரதமரின் குஜராத் பயணம் ரத்து:
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று குஜராத்தில் வெள்ள நிலைமையை நேரில் கண்டறிய அங்கு செல்ல இருந்தார்.அயோத்தி தாக்குதலையடுத்து அப் பயணத்தை பிரதமர் ஒத்தி வைத்துவிட்டார்.
லஷ்கர்-ஏ-தொய்பாவின் செயல்:
இதற்கிடையே அயோத்தி தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவே காரணம் எனக் கூறப்படுகிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்ட தாற்காலிக ராமர் கோவிலை தகர்க்கலஷ்கர் அமைப்பு பல காலமாக முயன்று வருகிறது. 2002ம் ஆண்டில் காஷ்மீரில் மன்சூர் ஷகீத் செளத்ரி என்ற தீவிரவாதியைராணுவத்தினர் சுட்டுக் கொன்றபோது இந்த விவரம் தெரியவந்தது.
அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்-டாப் கம்ப்யூட்டரில் அயோத்தி ஆபரேசன் குறித்த தகவல்கள் இருந்தன.
இதே அமைப்பு தான் 2002ம் ஆண்டில் குஜராத்தில் காந்திநகரில் அக்ஷர்தாம் கோவிலில் புகுந்து தாக்குதல் நடத்தியது.இதையடுத்து அயோத்தியிலும் தாக்குதலுக்குத் தயாரானது. ஆனால், இத் தாக்குதலுக்காக திட்டம் தீட்டிய தீவிரவாதிகளை2002ம் ஆண்டு நவம்பரில் தெற்கு டெல்லியில் துக்ளகாபாத் பகுதியில் வைத்து டெல்லி போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அயோத்திக்குச் செல்லும் வழியில் தான் அவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications