காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று (திங்கள்கிழமை) கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந் நிலையில் தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் திங்கள்கிழமை கன மழை பெய்தது. தஞ்சாவூர், மன்னார்குடி,நாகப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. திருவாரூரில் சுமார் அரை மணி நேரம் மழைகொட்டியது.
இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
மன்னார்குடியிலும் அரை மணி நேரம் கன மழை பெய்தது. நாகையிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து மக்களைகுளிர்வித்தது. இந்தக் கன மழை காரணமாக கடும் வெயிலில் தகித்து வந்த காவிரி டெல்டா பகுதி மக்கள் சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications