ராமஜென்ம பூமியில் ஊடுருவிய 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
அயோத்தி:
மிக பலத்த பாதுகாப்பு மிகுந்த, சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வளாகத்திற்குள் இன்று தீவிரவாதிகள்நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தி 5 தீவிரவாதிகளைசுட்டுக் கொன்றனர். இந்த மோதலில் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார்.
இச் சம்பவத்தால் அயோத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இன்று காலை 8 மணியளவில் வெடிகுண்டுகள் நிறைக்கப்பட்ட ஒரு ஜீப்பும் அதைத் தொடர்ந்து ஒரு அம்பாசிடர் காரிலும்தீவிரவாதிகள் வந்தனர். ராம பக்தர்கள் போல உடையணிந்து கொண்டு அவர்கள் வந்தனர்.
முதலில் வந்த ஜீப் பாதுகாப்புப் படையினர் கட்டியுள்ள தடுப்புச் சுவரின் மீது மோதி வெடித்தது. இதில் அந்த ஜீப் வெடித்துச்சிதறி அதை ஓட்டி வந்த தீவிரவாதியும் பலியானான். தடுப்புச் சுவரும் உடைந்து விழுந்தது.
இதையடுத்து தொடர்ந்து வந்த அம்பாசிடர் கார் கோவில் வளாகத்துக்குள் நுழைந்தது. அதிலிருந்த 5 தீவிரவாதிகள் கிரனைட்குண்டுகளை பாதுகாப்புப் படையினரை நோக்கி வீசினர்.
பின்னர் ஏ.கே.-47 மற்றும் ஏ.கே.-56 உள்ளிட்ட துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும்திருப்பிச் சுட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இத் தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் ஒருபோலீஸ்காரரும் உயிரிழந்தார். மேலும் 3 பாதுகாப்புப் படையினரும் காயமடைந்துள்ளனர். ஒரு பெண் பக்தை ஒருவரும்காயமடைந்தார்.
காரின் (டாக்சி) டிரைவரான ரேஹன் என்பவர் பிடிபட்டுள்ளார். அயோத்தியைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. தனது காரில் வந்தவர்கள் தீவிரவாதிகள் என்றே தனக்குத் தெரியாது என்று கூறியுள்ள அந்த டிரைவர், தனக்கு ரூ.1,300 வாடகை கொடுத்து ராமர் கோவிலுக்கு அவர்கள் காரை ஓட்டச் சொன்னதாகவும் பாதி வழியில் தன்னை கீழேதள்ளிவிட்டுவிட்டு காரை அவர்களே ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய இடத்தில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலை தகர்க்கவே தீவிரவாதிகள் வந்ததாகத்தெரிகிறது. அந்த முயற்சியை பாதுகாப்புப் படையினர் தடுத்துவிட்டனர்.
இது குறித்து பைசாபாத் போலீஸ் கமிஷனர் அருண் குமார் சின்ஹா கூறுகையில், வேத கோவில் வழியாக பாதுகாப்புவளையத்தை மீறி தீவிரவாதிகள் ராமஜென்ம பூமி வளாகத்திற்குள் காரில் நுழைந்தனர். அவர்களை சீதா ரசோய் (கோவிலின்சமையல் அறைப் பகுதி) பகுதியில் வைத்து பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
அவர்கள் துப்பாக்கியால் சுடத்தொடங்கியதும் பாதுகாப்புப் படையினரும் திருப்பி சுட்டனர். தற்போது ராமஜென்ம பூமிவளாகம் பாதுகாப்புப் படையின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. பைசாபாத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் பாதைகள்தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளன.
கோவிலில் இருந்த அனைத்து பக்தர்களும் பாதுகாப்பாக உள்ளனர். கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தீவிரவாதிகள்கோவிலை அடைவதற்கு முன்பே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர் என்றார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து நான்கு ஏ.கே.-47 மற்றும் ஒரு ஏ.கே.-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. சிலகிரனைட் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications