நாட்டில் பாதுகாப்பே இல்லை: அத்வானி -நாடு முழுவதும் போராட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு
டெல்லி:
அயோத்தியில் தீவிரவாதிகள் புகுந்த சம்பவத்திற்கு ஆர்எஸ்எஸ், விஎச்பி உட்பட முக்கிய இந்து அமைப்புகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளன. நாட்டில் பாதுகாப்பே இல்லை என்று அத்வானி கூறியுள்ளார்.
தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக தலைவர் அத்வானியும் ஆர்எஸ்எஸ்சும்அறிவித்துள்ளன.
அயோத்தி சம்பவத்திற்கு ஆர்எஸ்எஸ், விஎச்பி உட்பட முக்கிய இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விஎச்பிதலைவரான பிரவீண் தொகாடியா கூறுகையில், அயோத்தியில் இன்று நடந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும்,சோனியா காந்தியும் தான் காரணம்.
பாகிஸ்தானுடன் தற்போது நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்தி இந்திய ராணுவத்தின் மூலம்பாகிஸ்தான் தீவிரவாதத்தை நசுக்க வேண்டும். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் காரணம்.
ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்தது, மதரஸாக்களுக்கு சலுகைகள் அளித்தது, அலிகார்பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்தது இவையெல்லாம் தான் தீவிரவாத செயல்கள்அதிகரிப்பதற்கு காரணம் என்றார்.
விஎச்பி தலைவர் கிரிராஜ் கிஷோர் கூறுகையில், இன்று நடந்த இந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.ராமஜென்ம பூமிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க இவை தவறி விட்டன. எனவே மத்திய மற்றும் உத்திர பிரதேச அரசுகள்உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு:
அயோத்தி சம்பவத்தை தொடர்ந்து சூரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டது. 3 நாளாக நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன், விஎச்பி தலைவர்கள் அஷோக்சிங்கால், பிரவீண் தொகாடியா மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அயோத்தி சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் உடனடியாக இந்தக் கூட்டம் நடைபெறும் சூரத்திலுள்ள அம்பேத்கார் பவனில்கமாண்டோ படை பாதுகாப்பு போடப்பட்டது.
நாடு முழுவதும் போராட்டம்:
இதற்கிடையே அயோத்தி தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப் போவதாகஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது. இது குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், வரும் 2 நாட்களுக்குமிகவும் அமைதியான முறையில் எங்கள் அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெறும்.
அயோத்தியில் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த சம்பவத்திற்கு காரணம். பொதுமக்கள் அனைவரும் இந்த தாக்குதலுக்குஎதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.
பாஜக அவசரக் கூட்டம்:
தற்போது கவுகாத்தியிலுள்ள பாஜக தலைவர் அத்வானி கூறுகையில், தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கிளுடன் அயோத்திவளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மத்திய அரசும், உத்திர பிரதேச அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். பாஜக தலைவர்கள் கல்யாண்சிங்கையும், ராஜ்நாத் சிங்கையும் அயோத்திக்கு விரையுமாறு நான் கூறியுள்ளேன்.
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை டிஜிபி ஆகியோரிடம் நான் இது குறித்துபேசியுள்ளேன். தீவிரவாதிகளை ஒடுக்குவதில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என்று நான் அவர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன்.
தீவிரவாதிகள் இன்று நடத்திய இந்த தாக்குதல் மூலம் நாட்டின் சர்வதேச பாதுகாப்பில் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது நாங்கள் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம்அளித்தோம் என்றார்.
இதற்கிடையே அயோத்தி தாக்குதல் குறித்து விவாதிப்பதற்காக வாஜ்பாய் தலைமையில் பாஜகவின் அவசர ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இது குறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், இன்றுநடந்த இந்த தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது குறித்து விவாதிப்பதற்காக பாஜகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெறகிறது. இதில் அடுத்துஎடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
சிவராஜ் பாட்டீல், முலாயம் பதவி விலக கோரிக்கை:
விஎச்பி அமைப்பின் சர்வதேச துணைத் தலைவர் எஸ். வேதாந்தம் சென்னையில் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,அயோத்தியில் இன்று நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும், உபி முதல்வர் முலாயம் சிங்யாதவும் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
உ.பி.யில் நாளை பந்த்: விஎச்பி
தீவிரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து நாளை உத்திர பிரதேச மாநிலத்தில் பந்த் போராட்டத்திற்கு விஎச்பி மற்றும் பஜ்ரங் தளஅமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த தகவலை பஜ்ரங்தள் அமைப்பின் அமைப்பாளர் பிரகாஷ் சர்மாதெரிவித்துள்ளார்.
போலீஸாருக்கு பரிசு: மோடி
அயோத்தி கோவில் வளாகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் 6 பேரை சுட்டுக் கொன்ற மத்திய ரிசர்வ் படை போலீஸாருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications