தமிழகத்தில் உஷார் நிலை: கோவையில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
அயோத்தியில் நடந்த தாக்குதலையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாகவும் டிஜிபி அலெக்ஸாண்டர் கூறியுள்ளார்.
போலீசார் மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் கண்காணிப்பையும்பாதுகாப்பையும் அதிகரித்துள்ளோம். மாநிலம் முழுவதுமே முழு அமைதி நிலவுகிறது. முக்கிய இடங்களுக்கு போலீஸ்பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது என்றார்.
சென்னை கமிஷ்னர் நட்ராஜ் கூறுகையில், மாநகர போலீசார் முழுமையான உஷார் நிலையில் உள்ளனர். ரயில் நிலையங்கள்,விமான நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கோவையில்..
மதக் கலவரத்துக்கு பேர் போன கோயம்புத்தூரில் மாவட்ட நிர்வாகம் அதி தீவிர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.சிறுபான்மையினர் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கலாம் வருகை:
கோவைக்கு இன்றிரவு ஜனாதிபதி அப்துல் கலாம் வருகை தர இருப்பதால் ஏற்கனவே இங்கு பாதுகாப்புஅதிகமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உளவுப் பிரிவு போலீசாரின் கண்காணிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு மேலும் அதிகமாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், மேட்டுப்பாளையம், போதனூர் உள்ளிட்ட இடங்களில் மதரீதியில் பதற்றம் மிக்க பகுதிகளில் ஆயுதம் தாங்கியபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications