பிச்சையெடுக்கும் போராட்டம்: சாலைப் பணியாளர்கள் கைது
சென்னை:
தமிழகம் முழுவதும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது 10,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போதையஅதிமுக அரசு பதவியேற்றவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 10,000 பேருக்கும்வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடுசெய்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் மீண்டும் வேலை தரக் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்த சாலைப் பணியாளர்கள் இன்றுதலைநகர் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சாலைகளில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாகஅறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சாலைப் பணியாளர்கள் நேற்றே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககைது செய்யப்பட்டனர். ரயில் மூலம் சென்னைக்கு வந்த சாலைப் பணியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் மீறி ஏராளமான சாலைப் பணியாளர்கள் சென்னையில் குழுமினர். இன்று காலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம்அருகே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் அவர்கள் மாநிலத் தலைவர் சண்முகராஜா தலைமையில் ஈடுபட்டனர். அப்போதுஅவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
ஈரோட்டில் மாநிலத் துணைத் தலைவர் வெள்ளியங்கி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டஆயிரக்கணக்கான சாலைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் என வெளி மாநிலங்களுக்கு குடும்பத்தோடு சென்று பிச்சைஎடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக சாலைப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சண்முகராஜா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications