குவைத்தில் பாலியல் சித்திரவதை: தமிழக பெண் மீட்பு
சென்னை:
குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்று, வீட்டின் சொந்தக்காரர்களால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானஅருப்புக்கோட்டையைச் சேர்ந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காளையார்கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் வீட்டுவேலைக்காக குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் வேலை பார்த்து வந்த வீட்டைச் சேர்ந்த ஆண்கள் சுப்புலட்சுமியை பாலியல்பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்த சுப்புலட்சுமியை, வெளியில் நடமாடுவதற்குத் தேவையானமுறையான அனுமதி இல்லாத காரணத்தால் குவைத் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த சுப்புலட்சுமியின் கணவர் நரசிம்மப் பெருமாள், தனது மனைவியை மீட்டு தமிழகத்திற்குக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து சுப்புலட்சுமியைமீட்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கான குடிபெயர்வோர் பாதுகாப்பகம் மற்றும்குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தமிழக காவல்துறை அதிகாரிகள் சுப்புலட்சுமியை மீட்பதற்கானநடவடிக்கைகளில் இறங்கினர்.
இதன் விளைவாக சுப்புலட்சுமி பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று முன்தினம் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்குஅழைத்து வரப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications