காவிரி: மத்திய அரசு மீது வைகோ பாய்ச்சல்
தஞ்சாவூர்:
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மெளனம் சாதித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக கூறியுள்ளார்.
தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை கர்நாடகம் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசுஎடுக்கக் கோரி தஞ்சாவூரில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு வைகோ தலைமைதாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது வைகோ பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் மதிக்கவே மாட்டேன்என்கிறது. இதே நிலை நீடித்தால், நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குரியதாகி விடும், கேலிக் கூத்தாகி விடும்.
காவிரி பாசனப் பகுதிகளுக்குத் தேவையான நீர் கிடைக்காவிட்டால் இன்னொரு சஹாராவாக காவிரி டெல்டா பகுதிகள் மாறிவிடும்.
கர்நாடக அரசு தனது மாநிலத்திற்குட்பட்ட காவிரிப் பாசனப் பகுதிகளில் அணைகளை கட்டி வருகிறது. விதிகளை மீறிகட்டப்படும் இந்த அணைகளை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடாமல் மெளனமாக உள்ளது. இது தமிழகத்திற்குமத்திய அரசு செய்யும் துரோகமாகும்.
ஆறுகளை தேசியமயமாக்கி அவற்றை மாநில அரசுகளின் பிடியிலிருந்து விடுவித்து தனது கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசுகொண்டு வர வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் நடப்பது போலவே தெரியவில்லை.
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி நதிகளை தேசியமாக்குவது தொடர்பான அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்கவேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசு என்று ஒன்று இருப்பதற்கான அவசியமே இல்லை என்ற அவல நிலை ஏற்பட்டுவிடும்.
கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறுவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.வெறுமனே அறிக்கைகள் விடுவதும், வழக்குகள் போடுவதும் தீர்வுக்கு வழி வகுக்காது.
உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின்ஆலோசனைகளையும் கேட்டு அதன்படி நடக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications