வீராணம் ஏரி வற்றுகிறது; சென்னைக்கு நீர் வரத்து குறைந்தது
சென்னை:
வீராணம் ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், அதிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காகஎடுக்கப்படும் நீரின் அளவை சென்னை குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) குறைத்து விட்டது.
சென்னையைச் சுற்றிலும் உள்ள முக்கியமான நான்கு ஏரிகளிலிருந்து தான் இதுவரை சென்னை நகருக்கு குடிநீர்விநியோகிக்கப்பட்டு வந்தது. இது போதாது என்ற நிலை ஏற்பட்டதால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர்கொண்டு வரப்பட்டு அது சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வீராணம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து விட்டதால் ஏரியின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. வீராணம்ஏரியில் தற்போது 330 மெட்ரிக் கன அடி நீர் மட்டுமே உள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 1470 மெட்ரிக் கன அடியாகும்.
இதனால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு எடுக்கப்படும் நீரின் அளவை மெட்ரோ வாட்டர் குறைத்து விட்டது. பத்துநாட்களுக்கு முன்பு வரை வீராணம் ஏரியிலிருந்து தினசரி 77 கன அடி நீர் எடுக்கப்பட்டது. தற்போது அது 57 கன அடி நீராககுறைக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் தற்போதுள்ள நீரின் அளவை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே சென்னைக்குதண்ணீர் எடுக்க முடியும்.
தற்போது சென்னை நகரின் குடிநீர் வினியோகம் 680 மில்லியன் லிட்டராக உள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்வினியோகம் நடந்து வருகிறது.
செப்டம்பர் மாத இறுதி வரை இந்த அளவிலேயே தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகளில்மெட்ரோ வாட்டர் இறங்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications